Home தமிழகம் சென்னையில் மால்கள், அபார்ட்மெண்ட்களுக்கு இன்று முதல் பெரிய மாற்றம்

சென்னையில் மால்கள், அபார்ட்மெண்ட்களுக்கு இன்று முதல் பெரிய மாற்றம்

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்காக ஒரு லட்சம் ஸ்மார்ட் குடிநீர் மீட்டர்களை சென்னை குடிநீர் வாரியம் கொள்முதல் செய்ய உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த குடிநீர் மீட்டர்களை பொருத்தும் திட்டத்தை வாரியம் முன்னெடுத்து வருகிறது.

முதற்கட்டமாக, சென்னையில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் மீட்டர்களை பொருத்தும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2,400 சதுர அடிக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் இந்த ஸ்மார்ட் குடிநீர் மீட்டர் பொருத்தப்படும் வாய்ப்புள்ளது.

அடுத்த மாத இறுதிக்குள் இந்த குடிநீர் மீட்டர் பொருத்தும் நடவடிக்கைகளை சென்னை குடிநீர் வாரியம் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல் குளங்கள், தோட்டப் பணிகள், கார்கள் கழுவுதல் போன்ற காரணங்களால் குடிநீர் வீணாகாமல் தடுக்க இந்த மீட்டர் பொருத்தும் நடவடிக்கையை வாரியம் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.