சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சாலைகளில் தேங்கும் மழை நீரை அகற்றுவதற்கு மோட்டார் பொருத்திய டிராக்டர் வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் இரண்டாவது வாரத்திற்கு பிறகு வடகிழக்கு பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் இயல்பை காட்டிலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் தீவிரம் என்பது அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி முன்கூட்டியே வடகிழக்கு பருவமழைக்கு தயாராகி வருகிறது. கடந்த ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த இடங்களில் மழைநீரின் அளவு அல்லது மழைநீர் தேக்கத்தின் அளவு அதிகமாக இருக்கிறது என்பதை பட்டியலிட்டு அந்த இடங்களில் 100 ஹார்ஸ்பவர் திறன் கொண்ட மோட்டார்கள் மூலமாக தண்ணீரை உரிஞ்சுவதற்காக டிராக்டர்கள் சென்னை மாநகராட்சிக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறது.
கிட்டத்தட்ட 20்கும் மேற்பட்ட டிராக்டர்கள் முதல் கட்டமாக வரவழைக்கப்பட்டிருக்கிறது. சென்னையுடைய அண்டை மாவட்டங்களாகஇருக்கக்கூடிய திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்படக்கூடிய டிராக்டர்கள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இன்றைய தினத்திற்கு 100 டிராக்டர்களுக்கும், 500 மோட்டார் பம்புகளுக்கும் ஒப்பந்தம் என்பது போடப்பட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் 100 ஹார்ஸ்பவர் திறன் கொண்ட இந்த மோட்டார்களுடனான டிராக்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இன்னும் ஓரிரு தினத்திற்குள்ளாக இந்த டிராக்டர்கள் எந்தெந்த பகுதிகள் குறிப்பிட்டுருக்கிறார்களோ அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கேயே நிறுத்தி வைக்கப்படும்.
திடீரென ஏற்படும் மழைகளின் காரணமாகவும் பருவ மழையின் காரணமாகவும் அதிக அளவுல மழைநீர் குறிப்பிட்ட பகுதிகளில் தேங்கும் போது அந்த இடங்களில் இருக்கக்கூடிய அவுட்லெட்ஸ் வாயிலாகவோ அல்லது அருகாமையில் இருக்கக்கூடிய மழைநீர் வாயில்களுக்கு அந்த இடங்களில் இருந்து தண்ணீரை உரிிஞ்சி அந்த மழைநீர் வடிகாலுக்கு செலுத்தும் வகையில் இந்த வாகனங்கள் தற்போது கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு டிராக்டருக்கும் 500 அடி அளவிற்காக நீரை உரிிஞ்சு தள்ளக்கூடிய தற்காலிக பைப்புகளும் தயார் நிலையில் இருக்கிறது. ஒவ்வொரு டிராக்டர்களுக்கும் அது கொடுக்கப்படும் போது எவ்வளவு தூரத்தில தண்ணீர் இருந்தாலும் அந்த பைப்புகளின் மூலமாக இழுத்து வரப்பட்டு அருகில் இருக்கக்கூடிய மழைநீர் வடிகால்களுக்கு கொண்டு செல்லப்படும்.








