Home தமிழகம் மழைநீரில் தத்தளித்தபடி சென்ற வாகனங்கள் :

மழைநீரில் தத்தளித்தபடி சென்ற வாகனங்கள் :

கனமழையால் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக நேற்றிரவு சோழவரத்தில் 13 சென்டிமீட்டர் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த கனமழையின் காரணமாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கக்கூடிய நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் குளம் போல் தேங்கி இருக்கிறது.

குறிப்பாக சென்னையிலிருந்து ஆந்திரா நோக்கி செல்லக்கூடிய பாதையில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம் போல தேங்கி இருப்பதால் சென்னையிலிருந்து ஆந்திரா மார்க்கத்தில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் தற்போது அந்த தேங்கி இருக்கக்கூடிய மழைநீரில் தத்தளித்தபடி சென்று கொண்டிருக்கிறார்கள்.

சுங்கச்சாவடியில் தேங்கி இருக்கக்கூடிய மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.