இலங்கை மன்னார் அருகே ஆழம் குறைந்த கடல் பகுதிக்கு படையெடுத்த டால்பின்களுடன் குழந்தைகள் துள்ளித் துள்ளி விளையாடி மகிழ்ச்சி அடைந்தனர்.
இழுப்பை கடவை எனும் மீனவக் கிராமத்தை ஒட்டி உள்ள ஆழமற்ற கடற்பரப்பில் திடீரென டால்பின் மீன்கள் பெரும்பான்மையாக தோன்றின.
இதைக் கண்டு ஆச்சரியமடைந்த மீனவர்களும் குழந்தைகளும் அவற்றை நெருங்கி பார்த்து, டால்பின்களுடன் விளையாடி மகிழ்ந்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.








