வங்கக்கரையில் புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்காலம் போன்று பல இடங்களில் பரவலாக மழைப்பொழிவு மற்றும் ஒரு இதமான சூழல் காணப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகின்ற நாட்களில் மழைப்பொழிவு தமிழகத்தில் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
அது தொடர்பாக வாநிலை ஆய்வு மையமும் தகவல் வெளியிட்டிருக்கிறார்கள். அதன்படி வங்கக்கடலில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலின் வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் இன்று காலை சரியாக 5:30 மணி அளவில் புதிய காற்றழுத்த தாழுவு பகுதி உருவாகி இருப்பதாக வாநிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த திசையை நோக்கி நகரும் எங்கெங்கு மழைப்பொழி இருக்கும் என்ற தகவலும் வெளியாக இருக்கிறது.
அதன்படி உருவாகி இருக்கக்கூடிய புதிய காற்று தாழ் பகுதியானது மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெறக்கூடும்.
புதிய காற்ற தாழ் பகுதி என்பது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் .மேற்கு வடமேற்குதிசையில் நகர்ந்து பிறகு வலுப்பெறும் அடுத்த 24 மணி நேரத்தில் அதற்கு பிறகு அதை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் அது மீண்டும் வலுபெற்று வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா நிலப்பரப்பு ஊடாக நகர்ந்து செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் பார்க்கும்போது அது மகாராஷ்டிரா வரை அது செல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து செல்லக்கூடிய வடக்கு ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தெற்கு ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையும் தெரிவித்திருக்கிறார்கள்.
அந்த அடிப்படையில் பார்க்கும்போது தமிழகத்திற்கான மழைப்பொழிவு இருக்கிறதா? இந்த காற்றழுத்ட தாழ்வு பகுதி மூலமாக தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்திற்கு அதீத கன மழை இல்லை என்று இருந்தாலும் கூட பரவலாக மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையும் தெரிவித்திருக்கிறார்கள்.
குறிப்பாக இந்த மழையின் தாக்கம் என்பது வருகின்ற 18 ஆம் தேதி வரை இருக்கும் என்றும் அதற்கு பிறகு மழையின் தாக்கம் அந்த இதமான சூழல் என்பது படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு முன்பாகவே கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நேற்று முந்தினம் பொறுத்தவரையிலும் கூட காரைக்கால், மயிலாடுதுறை, மணல்மேடு, பெரம்பலூர், ஊத்துக்கோட்டை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, கடலூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள்.
அதேபோன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பூடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கூட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலிருந்து கூட பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதை நாம் பார்த்துக் கொண்டு வருகின்றோம்.
அதனுடைய தாக்கம் என்பது அடுத்த சில தினங்கள் அதாவது சரியாக சொல்ல வேண்டும் என்றால் 18ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் அதே போன்று டெல்டா மாவட்டங்களிலும் வருகின்ற 18 ஆம் தேதி வரை இதே போன்று பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.
வேறு மற்ற சில இடங்களில் கூட ஒரு இதமான சூழல் மழை பொழிவுக்கான இதமான சூழல் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்.
18ஆம் தேதிக்கு பிறகு மழையின் தாக்கம் அந்த இதமான சூழல் என்பது படிப்படியாக குறையும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் பார்த்தோம் என்றால் தற்போது உருவாகி இருக்கக்கூடிய புதிய காற்ற தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் கூட பரவலாக மழையின் தாக்கம் இருக்கும்.
அதீத கனமழை இல்லாமல் இருந்தாலும் கூட இந்த மாலை நேரங்களில் மழையின் தாக்கம் என்பது பரவலாக இருக்கும். அதேபோன்று பகல் நேரங்களில் ஒரு இதமான குளிர்ச்சியான சூழல் காணப்படும் என்றும்.
இதனால் வெயிலின் தாக்கம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 18ஆம் தேதி வரை இதே நிலைதான் தொடரும். 18ஆம் தேதிக்கு பிறகு இயல்பு நிலை வெயிலின் தாக்கம் என்பது அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது .








