திமுக நிறுவனர், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் வள்ளுவர் கோட்டத்திலும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
தற்போது சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலை மற்றும் உருவப்படத்திற்கும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் இணைந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தி வருகிறார்.
அண்ணா பிறந்த நாளில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்துவது முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து கடைபிடித்து வரும் பாரம்பரியமாகும்.








